வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

நிமிர்வின் சுவடுகள்

முதுமை படைக்கும் மூத்தோர் படைப்பு
வதுவை வாழ்வின் வற்றாச் சுரங்கம்
ஆக்கலின் படைப்பும் ஆளுமைத் தெளிவும்
தேக்கமின்றி தேசத்தில் வாழ
ஊக்க உளிகளாய் உறுதியே யாக்கும்

நிமிர்வின் சுவடுகள்
நிழலின் வார்ப்புகள்
எழிலின் வனப்புக்களாய்
ஏற்றத்தின் ஆணிவேர்

முதுமை புதுமை படைக்கும் சிற்றுளி
பெருமையாக்கும் பேராற்றல்
முதுமையின் சுவடுகளை
முனைப்போடு போற்றுவோம்.

நகுலா சிவநாதன்1711