வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்

சொற்களின் கோர்வையில் சுகத்திடை மொழியாகி
காற்றிடை வாழ்வு தந்த வானொலியே
காதலின் ஊற்றாய் ஆனாய்

மூச்சிடை காற்றோடு முனங்கியே எழுந்த
பேச்சிடை வாய்மொழியாகி
வண்ணத்தேரில் பவனி வருகிறாய்
செவிக்கு விருந்தாக சேதிகள் சொல்லி
சோதியாய் இளையோர்க்கு ஊக்கமானாய்

வானிடை தவழ்ந்து வண்ண தொழில்நுட்ப
வலையோடு வலம் வருகிறாய்
நாமின்று நற்றமிழ் உரைக்க வந்த வானலையே வாழ்க!

வரலாறு உன் பெயர் சொல்லும்
வண்ணக் கனவுகள் படைப்புகளாகும்
எண்ண அலைகள் ஏற்றம் பெறும்
எழுதிடும் கைகளும் உழுதிடும் உயர்விற்காய்

ஐரோப்பிய வானொலி வரலாற்றில்
படைப்பின் நாயகமாய் பாரிலே
உயர்ந்திட்ட வானலையே!
மொழியாகி வாழ்வு தந்தாய் வாழியவே!

நகுலா சிவநாதன் 1749