வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

சிலைகள்
பொன்னாய் மின்னும் சிற்பங்கள்
பொழுதை நிறைக்கும்
நற்சிலைகள்
கண்ணைக் கவரும் வடிவங்கள்
கருணை யளிக்கும் தெய்வங்கள்
எண்ணம் பேசும் எழில்வடிவம்
என்றும் மிளிரும் அழகுநிறம்

நிறங்கள் பலவாய் ஒளிர்ந்தோங்கும்
நீண்ட நாட்கள் அருளாக்கும்
திறன்கள் சேர்ந்து வரமாகும்
திறமை உணர்ந்து வடிவமாகும்
குறைகள் நீக்கும் நம்பிக்கை
கூட அருளும் இறைவாக்கு
கறைகள் மனத்தில் நீக்கிடவே
கனிந்து உருக வைத்திடுமே!!

நகுலா சிவநாதன்