சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

13.3.23 அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.

சந்தம் சிந்தும் கவி 214.

🔥 தீ 🔥

“நன்றும் தீ தும் பிறர் தர வாரா ”

ஜம்பூதத்தில் ஒன்றாய்
நின்ற சிவ தலம் தீ. அண்ணாமலை.

அண்ணா மலையிலே
கார்த்திகை மாதத்தின் தீ சுடராய் ஒளி கொடுத்து வணங்க வைத்தாய்.

திருமணம் விழா யாக குண்டலம்
செவ்வாய் வெள்ளி தீ விளக்கேற்றி தீச்சட்டி தீ மிதிப்பு மதிப்பு பெற்ற நீ

கோவத்தில் நீயோ சுட்டு பொசுக்கும் தீ.
அவனியில் காட்டுத்தீயாய் வலம் வருகிறாய் தீ.

யாழில் தீ தீயாய்
பரவிய அன்றைய படம் தீ.

அகோர பசியா?
மனிதர் மாடமாளிகை
மிருகங்கள் என்று
இன பேத இன்றி
தின்று தீக்கிறாய் தீயே.

தீ தீமை நினைத்தாரை
பட்டினத்தார்
அப்பத்தால் தீ
வைத்தாரே.

தீ என்றால் சுடுமா?
தொட்டால் சுடும் தீ
பட்டால் தெரியுமே.

கோடையில் கொதித்த தீயே
மாரியில் பனியாய்
குளிர்ந்து நடுங்க
வைக்கிறாய்!

நன்றி.