சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

7.2.23.
சந்தம் சிந்தும் கவி

நிச்சயதார்த்தம்.

பெண் கேட்டு
பெரியவர் வரவும்
பெரியோர் கேட்டு
பெரும் மகிழ்ச்சி

இரு வீட்டார் சம்மதத்துடன்
இருமனம் பேசி
இனிப்பு கொடுத்து
ஊடலும் தொடருமே

பழம் பாக்கு வெற்றிலை
புடவை பூமாலையுடன்
உறவுகள் கூடி
உள்ளம் மகிழ
சீர் கொண்டு சென்று

பெண் வீட்டில்
சிறப்புடன் பெரியவர் சிறியவர்
கூடி உண்டு கூடி மகிழ்ந்து
கூடிப் பேசி
நாள் நேரம் பாத்து

நிச்சயதார்த்தம்.
நடக்குமே.

அதிபருக்கும்
பாவை அண்ணா
இரவு வணக்கம்

நகுலவதி தில்லைதேவன்

.