சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

நகுலவதி தில்லைதேவன்

வணக்கம்

தை மகளே வருக
தைரியமும் தருக
தரணி போற்ற வருக வருக
தானியங்கள் பொலிக பொலிக.

பட்டினியை போக்க
பாரெல்லாம் விளைந்து நீ
வீடெல்லாம் நிறைந்து விதைத்தவன் மகிழந்து . மனமும் குளிர தை மகளே வருக வருக.

கோலமிட்டு. குத்து விளக்கேற்றி குடும்பங்கள் மகிழ்ந்து இருகை கூப்யே வரவேற்க நம்
இல்லம் வருக வருக தை மகளே!

பட்ட துயர் பறந்தே போக.
நோய் நொடிகள்
ஓடியே மறைய
பசி பட்டினி ஒழிக
திடம் கொண்ட
மனத்தோடு
தை மகளே நீ வருவாய்.

தை திங்களில்
புதிர் எடுத்து
புதுப் பானையில்
பொங்கி படைத்து மக்களும்
ஆவினங்களும்
ஆனந்தமாய் கொண்டாடி மகிழ தை மகளே தலை நிமிர்ந்து வா வா.

இளைஞரும் கூடியே காளை அடக்கி மாட்டு வண்டி சவாரி போட்டிகளும் போட்டு மகிழ பட்டாசு கொளுத்தி பண்புடனே வரவேற்று நிற்கிறோம்.

தை மகளே தலைநிமிர்ந்து. தையிரியமாக வா வா தைமகளே. இன்பம்
பொங்க இருளை நீக்கி
ஒளிகொண்டு
ஓடி வா வா

அதிபர். பாவை அண்ணா
நன்றி