சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

8.3.22 சந்தம் சிந்தும் கவி

திமிர் 165.

அளவுக்கு மிஞ்சிய சொத்து
ஆடாத ஆட்டம் ஆடிடுவார்

அந்தஸ்து பகட்டு
காட்டிடுவார்
பவனியே ஊர் வலம்
போய்யிடுவார்
பக்கத்தில் போவோரை
மதிக்காத திமிர்.

கோடியில் புரண்டாளும்
பக்கத்து வீட்டின் கோடியில்
(வீட்டு கோடி) கண்ணு

அரக்கத்தனமாய்
ஆயுதம் கொண்டு
கொத்து கொத்தாய்
அழிக்கும் அரசு திமிராய்

பாத்திட்டு பாக்காமல்
பாரெல்லாம் மௌவுனம்.

பசி என்றால் எச்சில் கையால் காகத்தை விரட்டார்
நாயை விட்டு துரத்திடுவார்
உயிரை குடிக்கும்
போர்கருவியை
ஆக்கியே பாரையே அடக்கிய திமிர்.

அதிருபக்கும் பாவை அண்ணா வுக்கு ம் இரவு வணக்கம் நன்றி.