சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

15.2.22 சந்தம் சிந்தும் கவி 162.

சிகரெட்

இளையர் மயக்கிடும்
சிகரெட்
2 விரலுக்குள் அடங்கிடும்
சிகரெட்

வட்டவட் ட புகையினை
விட்டு
வசியம் பண்ணிடும்
சிகரெட்
வாலிப வயதில் தொட்டால்
விடாது பயணம் செய்திடும்
சிகரெட்

உடலை வதைத்திடும் என்று தெரிந்தும் தொடர்ந்திடும் பற்றி இலுத்திடும் பயணம்
சிகரெட்

கணயம் கர்பவாயில்
சிறுநீர்பை சிறுநீரகம்
உணவுக்குழாய் வழி
நுளைந்திடும் காஞ்சர்
நோய்

வந்திட்டால் விடாது உனை
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிரை பறித்திடும்
சிகரெட்

பணத்தை கொடுத்து
இறப்பினை தேடாது விளக்கி பிடித்து கிணற்றில்
குதிக்காது
விட்டிடு விட்டிடு சிகரெட்
பிடிப்பதை

விட்டிடு விட்டிடு பழக்கத்தை
மகிழ்ந்தே வாழ்திடு
வாழ்வதை