வியாழன் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

27.1.22 வியாழன் கவி 175

உள்ளத்தின் வலி.

உள்ளத்தின் வலி மறக்க உதிர்திடும் நீர் துளிகள்

கையால் அடித்த அடி மறையும்
சொல்லால் அடித்த அடி
மறையுமா?

ஈட்டியாய் குத்திய
ஊரார் வாத்தைகள் தைத்தது நெஞ்சில் உடைந்து நெஞ்சம்

தனிமையில் நிற்கையில் இதயமும் சோர்கையிலே
ஆறுதலை தேடுமே உள்ளமது

தேறுதலை தரும் அந்த உள்ளதை தேடிடுமே மனது

அனைத்திடும் கைகளை பற்றிடும் என்கை

சிந்திய நீரை துடைத்திடும் கை யை
பற்றியே பருகிடும் உள்ளம் குழந்தையாய் மாறிடுமே.