சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

நகுலவதி தில்லைதேவன்

சந்தம் சிந்தும் கவி

பள்ளிப் பருவம்.

பாலராய் துள்ளி குதித்து ஓடிய போது
பாடசாலையில் தூக்கி சென்ற விட்ட முதல் நாள் நினைவு.

அழுது கொண்டு
அம்மா அம்மா
என்று பின்னால் ஓடியது நினைவு
பின்னே சென்றது மனம்.
முன்னே வந்தது பழைய நினைவுத் கவி தலைப்பு……

பள்ளித் தோழிகளுடன் உறவு ஊர்கதைகள்
பேசி, வேலியில் கொய்யா பறித்து,
காய்த்த மாவுக்கு கல் எறிய, நாயும் குரைக்க விடு விடு என்று ஓடிய பருவம் நினைவில்.

காசில்லாமல் செலவு செய்தது,
அம்மாவின் சீலைத்தலைப்பில்
சில்லறை எடுத்து கடலை கச்சான் வாங்கியதும் நினைவாய் நிலலாடுதே.

பள்ளி செல்லாமல்
பஸ்சில் பட்டினம் செல்ல பஸ்சில் ஆசிரியர் வரவும் பயந்த நானும் அம்மாவின் பின்னால் மறைய

ஆசிரியர் வந்து கையை பிடிக்க
அம்மா அழவே ஆசிரியர் தள்ளி போய்விட்டார்

காலை பாடசாலை வகுப்பு செல்ல நானும் தயங்கி கொண்டே நினைவுகள் பல நினைவுக்கு வந்ததே இன்பம்.

ஞாபகம் வந்ததே ஞாபகம் வந்ததே
பாதி வழியில் புளியம்பழம் நாவல் சாப்பிட்ட நினைவும்
ஞாபகம் வந்ததே

தோழிகள் வரும் வரை காத்து நின்று அன்ன நடை நடந்து வகுப்புக்கு பிந்திய போய் அடி வாங்கி யதும் ஞாபகம் வந்ததே.

நன்றி பாவை அண்ணா.