சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைதேவன்

161 சந்தம் சிந்தும் கவி.

முதுமை.

பிறப்பு என்பது இனிமை
இறப்பு. என்பது. முடிவு
இரண்டுக்கும் இடையில்
வாழ்க்கை

அம்மாவின் அன்புக் குழந்தை
இளமையில் துள்ளல்
துன்பம் தெரியாத. பருவம்
கனவுகள் கானும் வாலிபம்

குடும்ப வாழ்வு கூதூகலம்
கூடியிருந்த மகிழ்வும் காலம்
சொந்தம் தொடர்ந்திடும்
இன்பம்
பிள்ளைகள் தொடர்ந்திடும்
சொந்தம்

முதுமை வந்திடவே
தனிமை தொடரவே.
நோயும் பிடித்திடவே. வாழ்க்கையும் வெறுத்திடுமே

உள்ளமது நொந்திடுமே உணவாகும் வில்லைகளே
உதவிடும் தாதிகள் வரமே
உதவிய கைகளை நம்பியே

காலத்தைக் கடந்திடுவாரே
காலனின் வரைவையே
எதிர்பார்ப்பே
அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.
நன்றி