வியாழன் கவிதை

நகுலவதி தில்லைதேவன்

1.2.22.
சந்தம் சிந்தும் கவி. 160
ஓய்வு

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஓயாத வேலை
தினம் தினம் ஓய்வு இல்லை
சனி ஞாயிறு சிலருக்கு ஓய்வு.

ஞாயிறு வரவும் குடும்பங்கள் இனைவும்
குழந்தை கள் மகிழ்வும்
குமரிகள் கூத்தும்
குதிரைச் சாவாரியும்
விரைவு நடையும்
மிதிவண்டி ஓட்டுதலும்
கை கோத்து நடையும்
இயற்கை யின் வனப்பும்
இதயத்துக்கு அமைதியும்

ஓயாத வாழ்வுக்கு.
ஓய்வு நேரம் விருந்தே.

ஒவ்வொருவர் வாழ்விக்கும்
ஓய்வு தேவை
ஓய்வில்லா வாழ்வு
நோயின் வரவே.

வீதிகள் தோறும் மக்கள் கூட்டம்
திருவிழா ஊர்வலம் இன்று.

நாங்களும் இனைந்து. ( High park). கைப்பாக்
பூங்கா சென்று மகிழ்ந்தோம்
நன்றி