சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைதேவன்

சந்தம் சிந்தும் கவி. 160
25.1.22 செவ்வாய்.

பரவசம்:

பார் எங்கும் கொட்டி கிடக்குது
பார்ப்போர் மனதில் உருகுது
இயற்கையின் இனையற்ற
எழில் அழகு
அள்ளி நுகர்திடும்
பருகிடும் அளவில்லா
பாரினில் பரவசம்

தாமையின் பரவசம்
தவழ்ந்திடும் அகத்தினில்
மழலையின் சிரிப்பினில்
ம்மா அம்மா பேச்சினில்
விடும் மூச்சினில் பரவசம்

சின்ன சின்ன அடியெடுத்து
நீ நடக்கையிலே கண்ணுக்கு
பரவசம்

கட்டான மேனி அழகும்
காந்தக் கண் அழகும்
கட்டிங் காளை கன்னியர்
மிரட்டிடும் அழகும் பரவசம்.

சவை தன்னில்
பட்டம் பெற்று
பாராட்டும் போது
பெற்றிடும் இன்பம்
கேட்டிடும் பெற்றோரின்
பரவசம்.

பத்தனின் பத்தியில்
மயங்கிடும் இறைவனின்
பரவசம்
தேனை உறிஞ்சிடும் பரவசம்
மயக்கிடும் பரவசம்.
பத்தியின் உச்ச பரவசம்.