வியாழன் கவிதை

நகுலவதி தில்லைதேவன்

20.1.22 வியாழன் கவி 175.

கொண்டாட்டக் கோலங்கள்.

தலைமுறை தலைமுறையாக
கொண்டாட்டங்களும் தொடருதே

வருடா வருடம் தைப்பொங்கல்
வருடப்பிறப்பும், பாலன் பிறப்பும்
கோயில் திருவிழாவும்,. ஊர் கூடி தேர் இழுத்து,. கலியாணம் காது குத்தும் பூண்நூற்சடங்கு. பட்டாசு கொளுத்தி மேளதாளத்துடன்
ஊரார் கூடியே உறவாடியே உண்டு மகிழ்ந்து, ஆனந்தமாக
. ஆரவாரித்து கொண்டாடிய எடுப்பான கொண்டாட்டம்.

கொண்டாட்டம் முடிய திண்டாட்டம் வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்தவரும்,. காணியை விற்று பணம் கொடுத்தவர்கள் பலர்.

ஒருநாள் கூத்துக்கு மொட்டை வழித்தது போல கொண்டாட்டக் கோலங்கள்

வாழ்வில் வீண்விரையம்
வாழ்வு சீரழிவாய் சிதறியதே.
.