சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைதேவன்

165. சந்தம் சிந்தும் கவி

நாதியற்ற மானிடர்கள்

காசியினில் மானிடர்கள்
நாதியற்று வாழும் நிலை
மாறிடாதோ

ஊரையெல்லாம் சூறையாடி
பையினுள் போட எண்ணி
யுத்தம் என்ற பெரு நெருப்பில்
வதைக்கும் நிலை
மாறிடாதோ?

குஞ்சு முதல் முதியவர் வரை
அஞ்சி ஓடும் நிலைமை
மாறிடாதோ?

ஓடி ஓடி உழைத்து வாழ்ந்த
மண்ணை விட்டு
உயிரை பிடித்து ஊர் ஊராய்
ஓடும் நிலை
மாறிடாதோ

எல்லை கடந்து தஞ்சம்
புகுந்தது வாழும் மாந்தர்
நிலை மாறிடாதோ

ஈனம் அற்ற அரக்கர்
மனம்மாறி யுத்தம் நிறுத்தி
மாந்தர் வாழ வழிகாட்டும்
பாதை திறந்திடாதோ?
இறைவா

அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்