வியாழன் கவிதை

நகுலவதி தில்லைதேவன்

10.3.22. வியாழன் கவி. 182

உன்னதமே உன்னதமாய்*

உயிர் கொடுத்த உத்தமி
உன்னத உறவின் பத்தினி

இல்லத்தின் தலைவி
இன்ப துன்பத்தில் தோள்
கொடுக்கும். தோழி
தேவைகளை பூர்த்தி
செய்த தேவதை

புகுந்த வீட்டு படி தாண்டா
பத்தினியாய்
தன்னலம் மறந்து பிறர்
நலம் பேனும்
நலம்விரும்பியாய்
உடல் வருத்தி உள்ளத்தில்
உயர்ந்த. சிகரமாய்
நின்ற தாய்யே

பட்டம் பெறாத உன்னதமே
உன்னதமாய்

மண்ணுலகம் மறந்து
விண்ணுலகம் சென்றதேனோ
உன்னதமே உன்னதமாய்
நின்ற தாய்யே. வணங்கி
போற்றுகிறோம்