19.2.22. வியாழன் கவி 178
உருமாறும் கோலங்கள்.
நிறம் மாறும் பூமியில்
நிலம் உருமாறும் நிலவு
நித்தம் வளர்ந்து பெரிதாகி
நித்தம். தேய்ந்து மறையும்
உருமாறும் கோலங்கள்.
பணக்காரர் ஏழை. பாகுபாடு
மேலோர் கீழோர். வாழ்த்திய
மாந்தர் மடமையை
அடக்கி. ஒடுக்கி
தனிமை படுத்தி
ஆட்டி. வைக்க. கொறோனா
வந்ததே
தள்ளி தனித்து இருபத்தி
முடக்கி. மூலையில். இருத்தி
பயத்தைக் காட்டி. வலியை
கொடுத்ததே
அல்ட்ரா டெல்டா ஒமெக்கிறோன்
தொடர்ந்தே
பீஏ1. பீஏ2. பாரினில்
மாறிடும் கோலங்கள்.
உருகிடும் பனி கூடியும் வெப்பம்.
கொட்டியும். மழை
உயருதே. கடல் மட்டம்
சீரற்ற காலநிலையால்
விவசாயத்தை அழித்து
பசி பட்டினி
இறப்பு
பாரினில் கொடுமைகள் கூடி
உருமாறிய கோலங்கள்.
அதிபர் வாணி கற்கும், நகுலா தஸ்சினிக்கும். நன்றி.