சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதிதில்லத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 169.

பட்டினி

அழகிய இலங்கைத் தீவு தீவு தீவாக விற்று விற்று
பஞ்சு மெத்தையில் புரளும்
பஞ்சத்தை ஏற்படுத்திய
நவீன பஞ்சபாண்டவர்கள்.

பச்சிலங்குழந்தைக்கு
பாலும்இல்லை
பாடங்கள் படிக்க கரண்
இல்லை
வயலுக்கு இறைக்க
எண்ணெய் இல்லை.
வண்டிகள் ஓட எரிபொருள்
விலை
பண்டங்கள் வாங்க வரிசையில் காத்து நின்று
உயிரையும் பறித்தது
பட்டினி
பட்டினி வந்தால் பறந்திடும்
பத்தும்.
பாருக்கு வேண்டாம் பசியும்
பட்டினி இறப்பும்
பகிர்ந்தளித்து வாழ்வோம்.

அதிபருக்கும் பாவைஅண்ணாவுக்கும் நன்றி