வியாழன் கவிதை

தீதும் நன்றும்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-29
23-05-2024

தீதும் நன்றும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா
எமக்கு நாமே எடுத்தாழ்வது
முட்டி மோதும் வாழ்வினில்
எட்டி நடப்போம் மனிதாபினத்துடன்

நல்லவை அறமும்
தீயவை அறமற்றவையும்
நியாயமாய் நடப்பதாய் எண்ணி
அநியாயம் செய்வதும்

பிறர்க்கு உதவுவதாய் நினைத்து
உபத்திரவம் செய்வதுவும்
விழித்து நாம் அன்னப்பட்சி
பிரித்தெடுக்கும் பாலையும்

தண்ணீரையும் போல்
நல்லதையே பிரித்தெடுப்போம்.
செருக்கு, அகங்காரம் நீக்கி
தீதற்று, நன்றாய் வாழ்ந்திடுவோம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.