விடியலின் உன்னதம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
விடியலின் உன்னதம் வாழ்வின்
படிந்த இருளின் குகைக்குள் வலியோடு சிங்கத்தின. வாயில் அகப்பட்டுத் துடித்து
பிடிபட்டுத் தவிக்கும் தலைகளுக்குத்தான்
தருமது தருவான மிருதுவான மின்னுவது பொன்னான பொழுதாய்
வறுமைச் சிறைக்குள் வாடி ஒருநேர உணவையாவது
வயிறாற உண்ணமுடியாது வேடன் வலையில் சிக்கித் தப்பிய மானைப்போல மலரும் மறுநாள் மறுபடி நல்வரவென
சிறைக்குள் சிக்குண்டு சிதையும்
சிந்தனைகளுக்குச் சிறகு முளைக்காதா சிந்திக்கவும்
சிரிக்கவுமென நினைக்கும் அடுத்த கணங்கள் அவனுக்கு அக்களிப்பின் உதயமாய்
தனிமை முதுமையைனப் பருதவித்து
மகனையோ மகளையோ பார்த்து வருடியழுது ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அந்த
நொடிகள் அவனுக்கோ அவளுக்கோ அன்றுதான் ஆயுளைக் கூட்டும் ஆனந்தப் புதுவருடம்
அன்புக்காய் பாசத்திற்காய் அம்மாவாய் அப்பாவாய் அக்காவாய் நட்பாய் பாட்டியாய் தாத்தாவாய் அன்றாடம் அன்புக்காய் உருகும் அபலை
மெழுகுதிரிகளுக்குப் புரியும் தீயின் தீண்டுகையும் தித்திப்பான வருகையும்
தருகையும் திரிக்குத் தீயான மருந்தின் விருந்தாய் மண்ணிலேயே
விரியும் மறுபிறப்பாயென