வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 176
தலைப்பு — காட்டிடின் காந்தச் சிரிப்பை ….
பெரியளவு பொருளால் பெருமுணவு படைத்தாலும்
உரியளவு உப்பு இடாவிடின் உயர்வில்லை
உரியபடி உபசரிக்க சிரிப்பு வராவிடின்
பெரிதாக பெற்ற பதவிக்கு அழகில்லை.
விரிந்த இவ்வுலகில் வாழும் பிராணிகளுல்
சிரிப்புக்குத் தனியுரிமைச் சிறப்புடையவன் மனிதனே!
தெரிந்தும் இதனை தொலைத்துச் சிலபேர்
புரியாது தேடாது திரிவதிங்கு தெரிகிறது.
வீட்டிலோ நாட்டிலோ வீதியிலோ வாசலிலோ
காட்டிடின் கண்ணியமாய் காந்தச் சிரிப்பை
ஈட்டிடலாம் மதிப்புடன் இணைந்த மரியாதையை
ஊட்டிடலாம் உபசரிப்பின் உயர்வான சுவையை.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(25/05/2022)