சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 207

தலைப்பு – யோசி

அழகான வாழ்க்கையில் ஆயிரம் இன்னல்கள்
அரசனையே மிஞ்சும் அறிவான மக்கள்
அரக்ககுனம் படைத்தவர்கள் அருகுதா பெருகுதா
அறிவாக யோசித்தேன் ஆளுமையை காணவில்லை.

சித்தியும் புத்தியும் சிதறல்லின்றி சிறக்க
சிந்தனைகளை ஓடவிடு எட்டுதிக்கு தகவல்களை
சிற்றின்ப விடயத்துக்காய் சிதறாமல் யோசி
சிதைவின்றி நீவாழ சிகரமாய் தாங்கும்.

பறவையை பார்த்து விமானம் படைத்தவன்
பால் வீதியில் உலா வருகிறான்
பரந்த பூமியில் ஆயிரம் இன்பம்
பண்பாய் யோசி பக்குவமாய் வாழ்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/01/2023