வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 168
தலைப்பு — நரகமும் சொர்க்கமும் நம்கையில்
தேய்த்துக் கழுவிநன்றாய் தேங்கிய கரிதனைநீக்கல்
மாய்த்திடும் ஒன்றாக மனம்முடிவு செய்ததனால்
பாத்திரங்களும் மட்பானைகளும் பக்கமாய் படுத்துறங்க
காத்திரமாய் விறகு காய்ந்துலர்ந்து சிரிக்கிறது.
சமையல் எரிவாயு சுகத்தை வழங்கிடினும்
சுமையாயும் அமைந்து சஞ்சலம் தருவதுண்டு
சுவையான பொருட்களில் சோகமும் சேர்ந்திருக்கும்
நிலமையிதை உணர்ந்தோர் நாடுவரா சொகுசுகளை?
விறகை எரித்து விருப்புடன் சமைத்தனரன்று
பிறநாட்டு எரிவாயுவால் பிறக்குது சமையலின்று
தரவுகள் ஒன்றெனினும் வரவுகள் வேறாகும்
நரகமும் சொர்க்கமும் நம்கையில் உள்ளவையே.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
29/03/2022