சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சித்தும் சந்திப்பு — 167

தலைப்பு — பணி

பணிவுடன் பண்புடன் பலரிடமும் அன்புகாட்டி
துணிவுடன் அடுத்தவர் துயரறிந்து உணர்ந்து
இனிய சொற்களுடன் இங்கிதமாய் செயலாற்றின்
இனித்திடும் வாழ்வு இணைந்திடும் நற்பெயர்.

அடக்கம் அமைதி இன்முகம் இவற்றொடு
தடங்கலற்ற நற்செயல் தயவான உரையாடல்
இடமளிக்கும் அமைதியை இணைக்கும் நிம்மதியை
சுடராய் நற்சூழல் சூழ்ந்து ஒளிவீசும்

இட்டவற்றை இனிதே அர்ப்பணிப்புடன் செயலாற்றி
எட்டும்வரை எல்லோரையும் அன்பால் இணைத்து
கட்டுப்பாட்டுடன் கடமையை கன்னியமாய் புரியின்
கட்டளையிடும் பதவி கரங்களில் வந்தமரும்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
21/03/2022