சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 166

தலைப்பு — அன்றும் இன்றும்

ஆசனத்தில் பிரயாணி அமர்ந்திருக்க ரிக்க்ஷாவை
ஊசலாடாது உறுதியாய் இழுத்திடுவான் மனிதன்
தேசத்தில் அன்றிருந்த தோற்றச் சூழலிலும்
நேசமுடன் நம்மக்கள் நிம்மதியாய் வாழ்ந்தனரன்று.

எருதுகள் இழுத்திட உருவாக்கிய வண்டியை
விருப்பமுடன் சொந்தமாய் வைத்திருந்தனர் வர்த்தகர்கள்
தெருவீதிகளில் மோட்டார்வண்டிகள் தோன்றாத காலமதில்
நெருக்கமாய் நம்முன்னோர் நிம்மதியாய் வாழ்ந்தனரன்று.

வளர்ச்சியின் உச்சிக்கு விஞ்ஞானம் விரைவதால்
பலவித பயணவசதிகளும் போக்குவரத்துக்களும் உருவாகி
அளவற்ற சொகுசுகள் அதிகமாய் கிடைத்தும்
கலக்கமுடன் மனிதனின்று காட்சி தருகிறான்.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
15/03/2022