சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு —165

தலைப்பு — திமிர்

அறியாமை நிலையும் புரியாமை விளைவும்
அறிவை மடித்து அலையாய் அடித்து
வெறிபிடித்த ஒன்றாய் வெளிவரும் திமிராய்
வெறுப்பையிது வளர்க்கும் வீண்பேச்சை விதைத்து.

செருக்குக் காட்டின் சேர்ந்திடும் கவலைகள்
உருக்கமாய் நடப்பின் உயர்வு வரவேற்கும்
கருத்தை உணர்ந்து செருக்கை விலத்திடின்
நெருங்கும் நல்லன சுருங்கும் தீயன.

தவிர்த்து நிறுத்திடின் திமிரை செருக்கை
அவித்திட வைத்திடின் ஆவணச் செயல்களை
குவித்திடும் குதூகலம் கனிந்திடும் அமைதி
புவியில் மங்கலம் பொங்கிடும் பொலிவுடன்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
08/03/2022