சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 162

தலைப்பு — இருபெரும் பதவியில்

இருபெரும் பதவியில் இருந்து பணியாற்றுவார்
விரும்பும் பொருளை விரைந்து பெற்றிடுவார்
நெருக்குதல் நசுக்கினும் நினைத்ததை சுவைத்திடுவார்
இருந்திடுவார் முப்பத்திரண்டுடை இளைவேலின் கூட்டுக்குள்ளே.

நல்லதை தீயதை நன்றாய் அறிந்தவர்
வில்லனாய் மாறுவார் வீண்வார்த்தைப் பாவனையால்
நல்லுரையும் வழங்குவார் நாடுவோர் செவியினிக்க
அல்லலுறச் சுடுவார் அழுக்குச் சொல்லாலே.

இவரது பண்புகள் இரண்டும், ஈர்த்திடத்
தவறாது இன்பத்தையும் துன்பத்தையும் தக்கபடி
விவகரித்த நடத்தையால் வாடுவதும் வளர்வதும்
இவரது மாளிகை என்பதில் மாற்றம்மில்லை.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
15/02/2022