சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 161

தலைப்பு — காசுக்காய் உண்மை கரைகிறது

நீர்மையாய் நிலவாய் நிலவிய நேர்மை
தேர்வின்றித் தனித்து தாழ்வுற்றுச் சோர்கிறது
நீர்க்குமிழி வாழ்விதென்று நினைக்காத நெஞ்சங்களின்
நாரற்ற செயல்களால் நேர்மை தள்ளாடுது.

உண்மை உரைத்ததால் உயர்ந்தான் அரிச்சந்திரன்
என்பதை அறிந்தோரும் அழுக்குப்பொய் பேசுகின்றார்
கண்முன்னே உண்மையை காசுக்காய் மறைப்பவரால்
கண்ணீரில் வீழ்ந்து உண்மை கரைகிறது.

நம்பிக்கைச் சக்கரத்தில் நாடுநகர் நகருகையில்
எம்மவரை நம்பவைத்து ஏமாற்றிப் பொருள்
சம்பாதிப்போர் செயலாலே நம்பிக்கை இருப்பிழந்து
கும்மிருட்டில் புகுந்து விம்பத்தை இழக்கிறது.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
08/02/2022