சந்தம் சிந்தும் கவிதை

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு —160

தலைப்பு — இன்சொலால் பலரையும் கவர்ந்து.

பொறாமைப் புகையால் பொறாமை உருவாகுது
வராமை தராமையால் வாட்டம் வரவாகும்
இராப்பகல் துயரால் இன்னல் இணைவாகுது
இராது தொல்லைகள் இவற்றை அகற்றிடின்.

வெறுப்பால் கோபம் வெளிவரும் நெருப்பாய்
நெருக்குமிது அமைதியை உருக்கும் உண்மையை
பெருக்கும் பகையால் பலாத்காரம் மிகையாகும்
பொறுமையுடன் நடந்து பெறுவீர் நிம்மதி.

பணிவுடன் இன்சொலால் பலரையும் கவர்ந்து
துணிவுடன் பேராசைத் துயரைக் களைந்து
மனிதப் பண்புடன் மேன்மையுற உழைத்து
புனிதமாய் புவியில் பெருமையுடன் வாழ்வீர்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(01/02/2022)