வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 159
தலைப்பு — பரவசம்
ஆரம்பப் பாடசாலை ஆங்கிலப் பாடசாலையென
ஒரமாய் ஓயாது ஓடியாடிப் படித்து
சேரவேண்டிய கல்விக்காய் சர்வகாலாசாலை சென்று
பேரெடுத்தேன் டாக்டராய் பெற்றோர் பரவசப்பெற்றனர்.
தொழில் உயர்ந்த தரத்தில் கிடைத்தது
எழில்மிகு தோற்றம் என்னுடன் பிறந்தது
வழிபிறந்தது வரன் வந்தார் கரம்பிடித்தார்
ஒளிமயமான மணவாழ்வு ஒலிப்புடன் மலர்ந்தது.
விருந்துக்கும் குறைவில்லை வீட்டிலும் குறைவில்லை
பெருந் திரவியம் பெரும் புகழ்
இருந்தும் இல்லாத குறை உண்டு
வருந்த இல்லை வாழ்க்கை இதுதான்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
25/01/2022