வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 158
தலைப்பு — வானொலி வானில் மலர்ந்த மலர்கள்.
வாரந்தோறும் வானொலி வானில் மலர்ந்த
ஈரமுடை அழகுறு எழில்நிறை மலர்களால்
சீராகச் சேர்த்தமைத்த சிறப்புறு பாமாலைக்கு
பாராட்டுச் சொல்லெடுத்துப் பாட்டாய் எழுதுகிறேன்.
குவிந்திட்ட கவிதைகளுல் கணிந்தவற்றைக் கண்டெடுத்து
சுவைத்திட எமக்காய் சோர்வின்றி உழைத்து
உதவிய கரங்களை அமைதியுடன் வாழ்த்துகின்றேன்
புவியில் கவிவாழ கவிஞர்களும் வாழ்கவென.
காலத்தைக் குறுத்துக் காட்டும் கவிதைகள்
நானிலத்தில் உலாவுவதற்கு நூல்கள் துணையாவதுபோல்.
வாழ வழிகாட்டும் வளமான கவிதைகள்
வாழ்வதற்கு நல்ல நூல்வடிவம் பெறவேண்டும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
18/01/2021