சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 157

தலைப்பு — திருமணத் திருநாள்

நாதஸ்வர நல்லிசை நாற்புறமும் நிறைந்திருக்க
ஆதரவுதரு நிறைகுட இதயமலர் வரவேற்க
பேதமின்றி வந்தவர்கள் பொறுமையுடன் பார்த்திருக்க
வேதமந்திரத்துடன் நிகழ்வை வேதியர் ஆரம்பித்தார்.

மகளாய் மகனாய் மருமக்களாய் மணமக்களை
மிகமகிழ்வுடன் பெற்றோர் மணமேடையில் வரவேற்க
அகமகிழப் பெற்றாலி அணிவித்து அன்றுமுதல்
மணமகளை மனைவியாக்கி மகிழ்கிறார் மணமகன்.

மணமக்கள் கருத்தொருமித்து மங்கலமாய் வாழ்கவென
மணமக்களை வாழ்த்துகின்றார் மணநிகழ்வில் கலந்தோர்
மணமக்கள் இன்றுபோல் மகிழ்வுடன் என்றும்
இணக்கமுடன் இனிதே இல்லறம் நடத்திடுக.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
11/01/2022