சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்.

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 255

தலைப்பு – பகலவன்

பூக்களும் பறவைகளும் பூபாளம் இசைத்திட
புற்களில் பனித்துளிகள் நளினமாய் நடனமாட
குயிலும் கூவுது காகம் கரையது
ஆதிதாளம் ஐதியில் பகலவன் உதயமாகிறான்.

ஆயிரம் நாமங்கள் அழகாய் இருந்தும்
பகலவன் என்றதும் பாசமாய் இருக்குது
பட்டினியில்லா வாழ்வில் படியளக்கும் சாமியது
பட்டமரமும் பசுமையாகி வேடந்தாங்கல் ஆகுது.

ஊதாக்கதிரவன் உலகெல்லாம் செம்மஞ்சள் பரப்பி
வியர்வையை வெளியேற்ற கொழுப்பை கரைக்க
இலவசமாய் மருத்துவம் தருகிறான் பகலவன்
ஓசோனை காப்போம் புற்றுநோய்களை தடுப்போம்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
04/03/2024