சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 252

தலைப்பு – காதலர்

தென்றல் தொடும் தேனாய் இனிக்கும்
தாகம் தீர்க்கும் காதல் மொழிகளில்
தரணியில் பறக்கும் பட்டாம்பூச்சிகளாய் காதலர்கள்
தோட்டங்களாய் மாறும் காதல் உள்ளங்கள்.

பாசத்தில் மனங்கள் பஞ்சாய் இணையும்
பாசாங்கு இல்லாமல் பம்பரமாய் சுற்றும்
பார்ப்போர் மனங்களில் பொறாமையை உண்டாக்கும்
பாரினில் நாம்மென்ற உணர்வு பதிவாகும்.

காதல் இல்லாவுலகில் நான்வாழ விரும்பவில்லை
காதலோடு வாழுங்கள் வரம்புகளை மீறாதீர்கள்
காதலுக்கு மரியாதை காலமெல்லாம் வாழட்டும்
வாழ்ந்து காட்டிய காதல்கள் காவியமாய்யின்றும்.

காதலர் தின வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
02/02/2024