சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 201

தலைப்பு — யாதுமாகி நிற்கின்றாள் எம்மன்னை

வறுமை வாட்டுவதால் வலிமை விரட்டுவதால்
உருவாகும் துயரை உண்மையைக் கண்டு
விருப்போடு வழிபடுவோர் வளம்பெற வழிகாட்ட
நறுமலராய் யாதுமாகி நிற்கின்றாள் எம்மன்னை.

துயரங்கள் தீர்ந்திட துன்பங்கள் நீங்கிட
உயர்வுக்காய் உள்ளன்போடு அம்பிகையை வழிபட்டு
பயமின்றி பசியின்றி பெருமையுடன் வாழ்ந்திட
அபயகரம் நீட்டுவாள் அம்பிகை அடியார்க்கு.

ஓயாமல் துயரில் ஒலமிடும் எம்மவர்க்கு
தாயாகக் கரம்நீட்டி காத்திடுவாள் எம்மன்னை
ஓயாது ஓரணியாய் உள்ளன்பொடு வழிபட்டால்
தீயவற்றைத் தீயிலிட்டு தேடுவதைத் தந்திடுவாள்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(19/11/2022)