சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 229

தலைப்பு – இயற்கை

இயல்பான வாழ்க்கையில் இயற்கையும் இணைகிறது
இன்னிசை இராகங்கள் இன்பமாய் செவிகளிலே
பூபாளத்தின் நாட்டம் பூக்களின் ஓட்டம்
கேட்கத்தான் மனிதமில்லையென்று கேதாரகௌளையும் சொல்கிறது

எத்தனை நிறங்கள் எண்ணமெல்லாம் வண்ணங்களாக
அமைதியான இயற்கையை அறிவியல் இம்சைசெய்ய
Scotlandஇல் கரையொதுங்கியது இன்றுபல திமிங்கலங்கள்
இன்னும் என்னென்ன இன்னல்கள் காத்திருகிறதோ?

மானிடமே சீண்டதே மனசாட்சியை மீறாதே
எரியுது காடுகள் உருகுது பனிக்கட்டிகள்
கரியவாயுக்கள் அரிக்குது காட்டுது செய்திகள்
இயற்கையை நேசிப்போம் இன்பமாய் வாழ்வோம்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
16/07/2023