சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 221

தலைப்பு – காணி

பாரம்பரிய பரப்பானது பரம்பரையாய் கிடைத்தது
பூட்டனுக்கு கிடைத்தது தாத்தா காப்பாற்றியது
பெற்றோரின் உழைப்பால் நாகரீக கட்டிடமானது
ஆதீக்க அராயகத்தால் அன்று கலையிழந்தது.

ஆயிரம் காணி வாங்கினாலும் கிடைக்காது
அரண்மனை கட்டினாலும் சந்தோஷம் கிடைக்காது
பரம்பரை கால்பதித்த பண்பட்ட காணியிலே
மண்வாசம் மாறா மதிப்பான காணியது.

சொந்தங்கள் கூடியிருந்து சொர்க்கம் காட்டியது
சொந்தமான காணியிலே செலவில்லா இயற்கைவளமது
மணல்வீடு கட்டவில்லை மானம்மாய் திமிரோடு
அசையாத வாழ்க்கையது அடிமையில்லா சொர்க்கம்மது.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/05/2023