சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 216

தலைப்பு — தவிப்பு

கவிதைக்கு கருவானது அவள் கண்கள்
தமிழ்மொழியில் கவிவடிக்க தனித்துவத்தை கொடுத்தது
விழியோரம் கண்ணீர் வழி சொல்லவில்லை
காலத்தின் கோலமிது காதலில் தவிக்கிறது.

நினைவுகள் மட்டும் நிழலாய் தொடருது
நிற்பந்தங்கள் பெண்களை நியாயமற்று துரத்துகிறது
வேங்கையானாலும் விடுதலை வேட்டை குறையவில்லை
பெண்னே உந்தன் பெருமைக்கு விழிநீர்தானோ?!!

வசந்தகாலம் வரமாய் வண்ணமாய் வந்தாலும்
கொடிய கோடையிது கொடுமையை தந்தாலும்
விஞ்ஞான உலகில் விந்தைகள் பலவுண்டு
பெண்னேயுன் தவிப்புக்கு பொற்காலம் வருமா?!!

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(03/04/2023)

(கற்பனை மட்டுமே)