சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 213

தலைப்பு – நாதம்

பூபாளம் இசைக்க பூங்குயில்கள் பறக்குது
நாட்டிய மயில்கள் நட்டுவாங்கத்தை தேடுது
மூச்சுக் காற்று மூங்கிலின் நாதமானது
இயற்கையின் அற்புதமே இன்னிசை சுவாசமே.

ஏழு ஸ்வரங்களும் ஒய்யரமாய் இசைக்க
சூரியன் வருகையை அலைகள் இசைந்தாட
ஆரவாரமாய் ஹம்சத்வனியில் குருவிகள் கீச்சிட
அழகான காலைவேளை நாதம் செவியினிலே.

சிந்துபைரவி நில்லடிசொல்ல சில்வண்டு கேட்கவில்லை
மோஹன காந்தாரம் மொட்டுக்களாய் மலருது
பைரவியின் நிசாதத்தை பைங்கிளிகள் இசைக்க
சங்கராபரணம் நாதமாய் சங்கமம் செய்யுது.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
(05/03/2023)