சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 211

தலைப்பு – சாதனை

சாதனைக்கு வயதில்லை சாதிக்க வழியுண்டு
சோதனைக்கு அஞ்சாதே சோம்பேறியாய் மாறாதே
தோல்வியால் துவளாதே முயற்சியை கைவிடாதே
அணுகுண்டு வெடித்ததால் அப்துல்கலாம் சாதனையாளர்.

போற்றுவர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்
தோற்பவர் விட்டதில்லை தூய்மையான உழைப்பை
சோம்பேறிகள் வென்றதில்லை சாதனை சுவட்டை
விண்வெளியில் சாதிக்கிறாள் சமவுரிமை பெண்ணும்.

வியர்வையை நீசிந்து நதியாய் ஓடட்டும்
உயர்வை நாடே உரக்கப் பாடட்டும்
இமயமாய் முன்னேற்றம் அலையாய் எதிர்நீச்சல்
உயர்வாய் கூறட்டும் உன்சாதனையை என்றுமே.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(18/02/2023)