சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 208

தலைப்பு – விருப்பு

விந்தையை தேடுவது விஞ்ஞானத்தின் விருப்பு
அகந்தையாய் வாழ்வது படித்தவர் விருப்பு
மந்தையாய் வாழ்வது சிலரின் விருப்பு
சிந்தையில் முந்தையவர் வாழ்ந்ததே சிறப்பு.

எட்டாதவுயரம் தொட்டுப் பார்க்க வேண்டும்
பட்டமரத்தையும் வளர்த்துப் பார்க்க வேண்டும்
தொட்டுப்போன தென்றல் மீண்டும் வேண்டும்
கிட்டாதாயின் சட்டென மறக்க வேண்டும்.

வாழ்க்கையை வாழ்வது உன் திறமை
தாழ்த்திப் பேசுவது மனித்த்தின் சிறுமை
வாழ்த்தி வளர்வது வல்லவனின் பெருமை
நிகழ்த்துவான் நெகிழ்ச்சி என்னவன் இறைவன்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
(27/01/2022)