சந்தம் சிந்தும் கவிதை

திருமதி செ.தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம்!
பாவையண்ணா,கமலாக்கா!

பிள்ளைக் கனியமுது
********************

பிள்ளைக் கனியமுதே
பேசும்பொற் சித்திரமே
அள்ளி யணைத்திடவே
ஆனந்தம் பொங்கிடுதே(2)

கள்ளக் குறும்புனக்கே
காரணமே துரைப்பேன்
கண்ணை உருட்டியிங்கே
காரியஞ்செய் வதென்னே (2)

துள்ளித் திரிகையிலும்
தூளியிலா டலிலும்
தூக்கி யணைத்திடவே
துடிக்குதென துளமே
பள்ளிப் பருவத்திலே
பாதிவழி வருவேன்
பாசக் கரமிணைப்போம்
பார்த்தவர்கண் படவே
உள்ள உவப்புடனே
உன்வழிநோக் கிடுவேன்
உச்சி குளிருமன்றோ
உன்மடிநான் துயில
பள்ளந் தனிலோடும்
பாய்பொருளா னேனோ
பார்த்தன் அருளுவந்த
பாதிவிழிக் கனவோ! (இது)

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
12- 02 – 2024.