சந்தம் சிந்தும் கவிதை

திருமதி.செல்வி.தெய்வேந்திர மூர்த்தி

கொஞ்சிப்பேசும் சிட்டுக்குருவிகள்
———————————————-
அடைக்கலமாய் வந்தகுருவி
அந்தக்குருவி தானுங்க/
ஆணும்பெண்ணும் சேர்ந்திருந்து
அன்பைக்காட்டும் பாருங்க/
கொஞ்சிப்பேசும் சிட்டுக்குருவி
கொஞ்சமிங்கே வாருங்க/
குஞ்சுக்கு உணவூட்டுமழகை
கொஞ்சநேரம் பாருங்க /
ஊர்க்குருவி வீட்டுக்குருவி
ஊருக்கொரு பேருங்க /
ஊடல்கொண்டு பார்த்ததில்லை
உண்மையழகு தானுங்க/
கூட்டமாகப் பறந்துவந்து
கூடிவாழ்ந்து காட்டுங்க /
சொந்தமாக கூடுகட்டி
சொர்க்கமென்றே வாழுங்க /
சொந்தவீட்டில் கூடுவைத்தால்
சொந்தமென்றே பழகுங்க/
பக்கம்பக்கம் அருகிருந்து
பார்த்துப்பார்த்து ஊட்டுங்க/
பறக்கக்கற்றுக் கொடுக்குமழகு
பாரக்கவழகு தானுங்க/
பாரிக்குநெல் கொடுத்ததென
பார்த்தவர்கள் பாட்டுங்க/
பாசங்காட்டி பறக்குமிந்த
பறவைக்கு ஏன்குறையுங்க ?/
பாழும்மனிதன் செய்தவேலை
பார்த்துத்தலை குனியுங்க /
பரவிவரும் காந்தவலையை
பார்த்துக்கொஞ்சம் குறையுங்க/
படிப்படியாய் அழிக்கலாமா?
பாவமிந்தக் குருவிங்க //