சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*நாதம்*
சந்தத்தின் பாடல்களில் சங்கதிகள் கொஞ்ச
சாரீரம் கொண்டாடும் சங்கீத நாதம்

செந்தமிழின் செவ்வியலில் செந்தாள நடனம்
சிந்துமகள் காலசைவில் சிலம்பொலியின் நாதம்

சுந்தரக் கலைவாணி சுரமீட்டும் வீணை
சிந்திவரத் தேனிசையில் சேர்கின்ற நாதம்

நந்தகோபன் குழலோசை நந்தவனம் காண
பந்தமென பசுக்களுக்கும் பரிசளிக்கும் நாதம்

மங்கையவள் மணக்கோலம் மணவறையில் தங்க
மாங்கல்யம் சேர்க்கின்ற
மங்களத்து நாதம்

சங்கத்தமிழ் தொடர்ந்து சாற்றும் தமிழ் ஓசை
சந்திக்கும் தங்குமந்த
சங்கு முழங்கு நாதம்.