சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*ஊக்கி*
உயர்வே வேண்டும் உலகில் என்றே
உத்தம மாந்தர் உலகில் தோன்றி
ஆக்கம் பெருகும் ஊக்கம் பலவும்
அளிக்கும் நல்ல பெரியார் ஆகி
நோக்கம் ஒன்றே குறியாய் கொண்டே
நோன்பு பலவும் தமக்கே ஆக
அயராப் பணியை அனுதினம் ஆற்றி
அன்பால் உலகை அழகாய்க் காப்பார்.

கயவர் என்றே ஐயோ பாராய்
காசினி உலவும் களங்க மனிதர்
ஆக்கம் யாவும் அழிவே ஆக
கூக்குரல் ஒன்றே குவலயம் காண
ஊக்க மருந்தை
உலகுக் அளித்தே
உயிரை அழிக்க
உலையே வைப்பார்

ஊக்கம் பலவாய் உலகில் உண்டு
உய்து அறிந்தால்
உயர்வும் உண்டு