* ** இல்லற இன்பம்.****
அன்பர் இருவர் அணையும் இல்லறம்
அன்பு மலர்களின் அழகிய சங்கமம்
இன்பத் தலைவன் இயற்றும் செல்வம்
இனிய தலைவி இயக்கும் இல்லம்
மலரில் மணமோ மாறுதல் இல்லை
நிலவில் ஒளியோ நீங்குதல் இல்லை
உலவும் சூரியன் உறங்குதல் இல்லை
குலவும் வாழ்வில் குறைகளும் இல்லை
பின்னும் செல்வம் பிள்ளை என்றாகும்
பிரியம் பெருக்கி பேற்றைக் கொடுக்கும்
வன்மம் இல்லா வாழ்வும் வளரும்
வசந்தம் ஆகி வாசம் பரப்பும்
உண்மைக் காதல் உலகில் வாழ
கண்ணில் காவியக் காட்சி ஆகி
மண்ணில் பணிகள் பரவச் செய்து
பண்பாய் வாழுமே பாசமலராய்.