*காதல் வாழும் *
மாற்றங்கள் வந்திடவே மயக்கங்கள் என்னுள்
மனதோடே பேசுகிறேன் மையலையும்
தேடி
நேற்றிருந்தாள் இன்றில்லை நேர்ந்ததுவும் என்னோ
நேரங்கள் கரைகிறதே நிம்மதியும் போச்சே
ஆற்றோரம் கொடியோடே அசைந்தாடும்
பூவே
அலைபாயும் எனதுள்ளம் அறிவாயோ
நீயும்
தேற்றியின்பம் தருவாளோ தேனிசையாய் வந்தே
தேடுகிறேன் தமிழ்மகளே தேவதையே
வாராய் .