* பரவசம் *
விண்ணுறை தெய்வம் விரும்பி வேண்டி
பண்ணினால் பாடி பக்தி செய்தே
எண்ணம் என்றும் எண்ணி நினைந்து
புண்ணியச் செயல்கள் புரிந்து நின்று
வண்ண அன்பு மலரால் வணங்கி
திண்ணமாய் மனத்திடை திருவடி தொழ
மண்ணினில் மானிட உருவம் தாங்கி
தண்ணொளி வீசி தாங்கும் தயாபரனை
கண்ணிணால் காணக் காணப் பரவசமே
*……….*