சந்தம் சிந்தும் கவிக்காக
இல 18
*இலக்கு*
ஒற்றுமை ஓங்கிடல் வேண்டும்
ஒன்றாகி நின்றிடல் வேண்டும்
பற்றுடன் வாழ்ந்திடல் வேண்டும்
பல்கலை வளர்த்திடல் வேண்டும்
கற்றுணர்வு பெருக்கிடல் வேண்டும்
கருணையை காட்டிடல் வேண்டும்
முற்றும் முயன்றிடல் வேண்டும்
முழுமைக்கும் உழைத்திடல் வேண்டும்
நற்றவம் இயற்றிடல் வேண்டும்
நன்னெறி ஒழுகிடல் வேண்டும்
மற்றுயிர் மதித்திடல் வேண்டும்
மண்வளம் காத்திடல் வேண்டும்
பெற்றோரை காத்திடல் வேண்டும்
பெரியோரை மதித்திடல் வேண்டும்
உற்றோர்க்கு உதவிடல் வேண்டும்
உறவைப் பேணுதல் வேண்டும் .