சந்தம் சிந்தும் கவிதை

திருமதி . அபிராமி கவிதாசன்.

14.03.2023
சந்தம் சிந்தும் நிகழ்வு -214
தலைப்பு !
“தீ”
அன்னம் தண்ணி அமிழ்து உணவும்
ஆகாரம் ஆக்கும் ஆற்றல் தீயே //

அக்கினித் தீயே அற்புதம் நீயே
அன்னை சக்தி கொண்டவள் நீயே//

அடுப்பை மூட்டி ஆக்கி வடிக்கும்
அழகிய இல்லம் சிறக்க செய்தவளே //

தீபத் தீயாய் உருவாகி உலக
தீமை பொசுக்கி எரிக்க கண்டேன். //

தூபப் பொடிக்கும் துளித்தீயும் புத்துயிராய்
துர்வினை பலவும் விரட்டக் கண்டேன் //

தீக்குச்சி துளித்தீ செந்தளிர் தீபம்
தீவினை அகற்ற ஏற்றக் கண்டேன் //

போகி பண்டிகை புதியென புகுத்த
பொசுக்கி பழையென அழிக்க கண்டேன் //

சூரிய தீச்சுடர் சுகப்படும் வாழ்வில்
சொரிந்து நிறைந்து பொழியக் கண்டேன் //
நன்றி 🙏